விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன், ஐரோப்பிய நாடுகளில் டிக்கெட் முன்பதிவில் மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகியுள்ளது. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் லியோ திரைப்படம் வெளியான சமயத்தில் ஐரோப்பிய நாடுகளில் சுமார் 10ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.