அஜித்குமார் - ஆதிக் ரவிச்சந்திரன் 
சினிமா

மீண்டும் இணையும் அஜித்குமார் - ஆதிக் ரவிச்சந்திரன்.. அஜித்குமாரின் அடுத்த படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்?

நடிகர் அஜித் குமாரின் அடுத்த படத்தையும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Srini Vasan

நடிகர் அஜித் குமாரின் அடுத்த படத்தையும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் - அஜித் குமார் கூட்டணியில் வெளிவந்த Good Bad Ugly படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அஜித் குமாரின் 64ஆவது படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்க உள்ளதாகவும், படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது,.

மேலும், வரும் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கி, 2026 கோடை விடுமுறையில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.