அபிஷன் ஜீவிந்த் 
சினிமா

"பிக்காசோ" படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என அறிவிப்பு

"ஹக்குனாமாடாட்டா" பாடலை அபிஷன் ஜீவிந்த் பாடியுள்ளார்

Manigandan Raja

சிவ ராஜ்குமார் - அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடித்துள்ள "பிக்காசோ" திரைப்படத்தின் முதல் பாடல் நாளை ((27-ம் தேதி)) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் இயக்கும் இந்த படத்தின் மூலம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் பாடகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். லியான் ஜேம்ஸ் இசையில், "ஹக்குனாமாடாட்டா" என தொடங்கும் பாடலை படத்தின் நாயகனான அபிஷன் ஜீவிந்த் பாடியுள்ளார். இந்த படத்தில், யோகலட்சுமி, கானா வினோத் மற்றும் ஷிவாணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.