Simbu 
சினிமா

இயக்குநர் வெற்றி மாறன் இயக்க உள்ள அரசன்

வடசென்னை திரைப்படத்தின் கதையுடன் தொடர்புடைய படமாக இப்படம் உருவாக உள்ளது

Web Team

இயக்குநர் வெற்றி மாறன் இயக்க உள்ள அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் வரும் 9 ஆம் தேதி தொடங்கும் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். வடசென்னை திரைப்படத்தின் கதையுடன் தொடர்புடைய படமாக இப்படம் உருவாக உள்ள நிலையில், வடசென்னை படத்தில் நடித்தவர்களில் சிலரும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்ததாக சமீபத்தில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்தார்.