Avatar: Fire and Ash திரைப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஜேம்ஸ் கேமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத் திரைப்படம் டிசம்பர் மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. Avatar சீரிசில் வெளியாகும் மூன்றாவது பாகம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.