ஆவேசம்-2 திரைப்படம் நிச்சயம் உருவாகும் என்றும் 2027 அல்லது 2028ஆம் ஆண்டில் திரையரங்குகளில் எதிர்பார்க்கலாம் எனவும் நடிகர் பகத் பாசில் நம்பிக்கை தெரிவித்தார். ஜீத்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் தயாரித்து நடித்த ஆவேசம் திரைப்படம், 2024ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.