ராமாயணா படத்தில் ராமராக நடிக்கும் ரன்பீர் கபூரை இந்துத்துவவாதிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், பாடகி சின்மயி ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2011ல் ராக்ஸ்டார் பட புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ரன்பீர் கபூர், மாட்டிறைச்சி தனக்கு பிடித்தமான உணவு என கூறியிருந்தார்.
அந்த பேட்டியை தற்போது சுட்டிக்காட்டி, மாட்டுக்கறி சாப்பிடுபவர் ராமராக நடிப்பதா? என இந்துத்துவவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கடவுளின் பெயரை சொல்லிக்கொண்டு பாலியல் வன்கொடுமை செய்த பாபாஜி, பரோலில் வெளிவந்து வாக்கு சேகரிக்க முடியும் ஒரு நாட்டில், ஒருவர் சாப்பிடும் உணவு தான் பெரிய பிரச்சனையாக தெரிவதாக சின்மயி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.