பேச்சுலர் பட நடிகை திவ்ய பாரதி, பவன் கல்யாண் தான் தெலுங்கில் தமக்கு மிகவும் பிடித்தமான நடிகர் என தெரிவித்துள்ளார். கோட் திரைப்படம் மூலம் விரைவில் தெலுங்கில் அறிமுகமாகவிருக்கும் அவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பவன் கல்யாண் நடித்த ‘குஷி’ திரைப்படம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், பல முறை அந்தப் படத்தை பார்த்திருப்பதாகவும் கூறினார். மேலும் நடிகர் அல்லு அர்ஜுனையும் பிடிக்கும் என்றார்.