அப்பா ஓகே சொன்னால் அவருடன் சேர்ந்து நடிக்க நான் எப்போதும் தயாராக உள்ளேன் என நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க நடிகை ஸ்ருதிஹாசன் மும்பையில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தக் லைஃப் படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்ப்பேன் என்றும், ரஜினியுடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவம் என்றும் தெரிவித்தார்.