RJ Balaji karuppu 
சினிமா

தீபாவளி அன்று கருப்பு திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் கருப்பு திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

Web Team

தீபாவளி திருநாள் அன்று கருப்பு திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ரெட்ரோ திரைப்படத்தை அடுத்து, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ளார்.

இது அவரது 45-ஆவது திரைப்படமாகும். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் கருப்பு திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளிவரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.