கயாடு லோகர் 
சினிமா

3,700 மீ. உயரமுள்ள மலை சிகரத்தில் ஏறிய கயாடு லோகர்

சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து நெகிழ்ச்சி இன்னும் பல சிகரங்களை அடைய வேண்டியுள்ளதாக பதிவு

Manigandan Raja

நடிகை கயாடு லோகர், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 3 ஆயிரத்து 700 மீட்டர் உயரமுள்ள உத்தரகாண்ட் மாநிலத்தின் பிரசித்தி பெற்ற தயாரா புக்யால் மலை சிகரத்தின் உச்சியை அடைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதுதான் தனது முதல்பயணம் எனவும், இன்னும் பல சிகரங்களை அடைய வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தாம் எப்போதும் ஒரு மலை பெண்ணாகவே இருந்துள்ளதாகவும், இனியும் அப்படியே இருக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.