தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் கடந்த 1988 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பி.ஆர். சோப்ராவின் மகாபாரதம் தொடரில் கர்ணன் கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற பங்கஜ் தீர், புற்றுநோய் பாதிப்பால் தனது 68 வயதில் உயிரிழந்தார்.
மும்பையில் அபின்னே ஆக்டிங் அகடமி நடத்தி வந்த பங்கஜ் தீர், அவரது சகோதரருடன் இணைந்து பல திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.