அனுஜ் பண்டிட் சர்மா 
சினிமா

"கோய் மில் கயா" புகழ் அனுஜ் பண்டிட் சர்மா திருமணம்

நீண்டகால காதலி பிரப்ஜோத் சாவ்லாவை கரம் பிடித்தார் இந்து மற்றும் சீக்கிய மரபுகளின்படி நடந்தேறிய திருமணம்

Manigandan Raja

ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் 2003ல் வெளியான "கோய் மில் கயா" திரைப்படத்தில், "பிட்டு சர்தார்" என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனுஜ் பண்டிட் சர்மா, தனது காதலி பிரப்ஜோத் சாவ்லாவை திரும ணம் செய்துகொண்டார்.

அனுஜ் பண்டிட் சர்மா

இந்து மற்றும் சீக்கிய முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணப் புகைப்படங்களை அனுஜ் பகிர்ந்துள்ளதைத் தொடர்ந்து, ரசிகர்கள் பலரும் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.