15 
சினிமா

ரூ. 100 கோடி கேட்டு டிடி நெக்ஸ்ட் லெவல் பட நிறுவனத்திற்கு நோட்டீஸ்.. திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் நோட்டீஸ்

நடிகர் சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு திருப்பதி தேவஸ்தானம் அறங்காவலர் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Srini Vasan

நடிகர் சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு திருப்பதி தேவஸ்தானம் அறங்காவலர் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வழக்கறிஞர் மூலம் அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார். அதில், படத்தில் இடம்பெற்றுள்ள சீனிவாசா கோவிந்தா எனத் தொடங்கும் பாடலை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

படத்தின் தயாரிப்பாளர் மீது திருப்பதி காவல் நிலையத்தில் ஜன சேனா கட்சியினர் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.