18 ஆண்டுகளுக்கும் மேலாக...
கல்லூரியில் மலர்ந்த காதலை, 18 ஆண்டுகளுக்கும் மேலாக அடைகாத்து வந்த பிரியா பவானி சங்கருக்கு கெட்டி மேளம் கொட்ட டும் டும் நடந்தது.
ஊடகத்துறையில் செய்தி வாசிப்பாளராக பிரபலமடைந்த பிரியா பவானி சங்கர், அடுத்து சின்னத்திரையின் மூலம் சீரியல்களில் நடித்து பின் வெள்ளித் திரையில் கதாநாயகியாக வலம் வருகிறார்.
18 வயதில் தனது கல்லூரி நாட்களிலேயே ராஜவேலு ராஜ் என்பவருடன் காதலில் விழுந்த அவர், நீண்ட காலமாக அவரை திருமணம் செய்ய திட்டமிட்டு வந்தார்.
ரகசியமாக திருமணம்...
தனது நீண்ட நாள் காதலன் ராஜவேலு ராஜுடன் பிரியா பவானி சங்கர் மல்லிகை பூ மாலையும், கழுத்துமாக இருந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகிய நிலையில், இருவருக்கும் ரகசியமாக திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக இணையப்பக்கத்தில் தகவல்கள் றெக்கை கட்டி பறந்தது.
கிரீஸில் நடக்கும் அனிருத் - காவ்யா மாறன் திருமண புகைப்படம் வெளியாகும் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில்,திரை பிரபலமான பிரியா பவானி சங்கர் சப்தமே இல்லாமல் திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார். பிரியா பவானி சங்கரின் கல்யாணம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இனிதே நடந்து முடிந்திருக்கிறது.
ரசிகர்கள் வாழ்த்து
எந்த ஆராவரமும் இன்றி மணமக்கள் எண்ட்ரி கொடுத்த நிலையில் தாலி கட்டும் நிகழ்வில் எந்த அவசரமும் இன்றி இருவரும் அந்த தருணத்தை அணு அணுவாய் ரசித்து மகிழ்ந்தனர்.
மண வாழ்வில் அடியெடுத்து வைத்து பிரியா பவானி சங்கருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து, அவரது திருமணத்தை மேலும் அழகாக்கி வருகின்றனர்.