"மிஸ்டர் பாரத்" படத்தின் "பேடி ஃபெல்லா டி" வீடியோ பாடல் வெளியீடு மிஸ்டர் பாரத் படம் டிசம்பர் 11-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் ‘பேடி ஃபெல்லா டி’ வீடியோ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
பிரணவ் முனிராஜ் இசையில், ஈஸ்வர் சந்தனலட்சுமி வரிகளில் ஆஷ்லே ஜேசி பாடலை பாடியுள்ளார்.
இயக்குநர் நிரஞ்சன் இயக்கியுள்ள இந்த படத்தில், யூடியூபர் பாரத் கதாநாயகனாக நடிக்க, ‘கட்சி சேர’ பாடல் மூலம் பிரபலமான சம்யுக்தா விஸ்வநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படம் டிசம்பர் 11-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.