பார்த்தவர்களுக்கும் பார்க்காதவர்களுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு என படத்தின் ரீ ரிலீஸ் ப்ரொமோ வெளியாகி இருக்கும் நிலையில், படம் தொடர்பான தகவல்கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.
மனித உறவுகளின் ஆழம்
கே.விஸ்வநாத் இயக்கத்தில் 1980ம் ஆண்டு வெளியான சங்கராபரணம் திரைப்படம், இந்திய பாரம்பரிய இசையின் மேன்மையை எடுத்துரைக்கும் படமாக அமைந்தது. ஜே.வி சோமயாஜுலு, மஞ்சு பார்கவி, துளசி மற்றும் சந்திரமோகன் உள்பட பலர் நடித்த படத்தில் ஒரு இசைக் கலைஞனின் வாழ்வு, மனித உறவுகளின் ஆழம் என பல விஷயங்கள் உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
1980 பிப்ரவரி 2 அன்று வெளியான சங்கராபரணம், கிட்டத்தட்ட காலியான அரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்டது. ஆனால் விரைவில் பரவலான பிரபலத்தைப் பெற்றது. இறுதியில் பல இடங்களில் 25 வாரங்களுக்கும் மேலாக ஓடியது.
தேசிய விருது பெற்ற படம்
கே.வி மகாதேவன் இசையில் உருவான பாடல்களுக்கு தனது குரலால் உயிர் கொடுத்திருந்தார் எஸ்.பி பாலசுப்ரமணியம். முழுக்க முழுக்க இசை விருந்தாக அமைந்த இந்த படத்திற்கு தேசிய விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்ட நிலையில், படம் மீண்டும் தியேட்டருக்கு வருகிறது. People's Film Academy and Channel Five நிறுவனங்கள் இணைந்து படத்தை தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரைக்கு கொண்டு வருகின்றன.
4K Ultra HD, 7.1 Surround Sound தரத்தில் உருவாகும் படத்தின் புதிய பதிப்பை, ஸ்ரீலால் தேவராஜ் உருவாக்கியுள்ளார்.
இம்மாதமே ரீ ரிலீஸ் செய்யப்படும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியிருக்கும் நிலையில், படத்தை நவீன தொழில்நுட்பத்துடன் சிறந்த விருந்தாக தியேட்டருக்கு கொண்டு வரும் பணிகளில் படக்குழு மும்முரம் காட்டி வருகிறது.
வீடியோவைக் காணலாம்