கலவையான விமர்சனம் பெற்ற சீன் திரைப்படம் உலக அளவில் 260 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், வெளிநாடுகளில் மட்டும் 90 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவில் நல்ல வசூல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் சேதுபதி - மிஷ்கின் கூட்டணியில் உருவான 'Train'
விஜய் சேதுபதி - மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள 'Train' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. வரும் 4ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தணிக்கை வாரியம் இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.
கோலிவுட்டில் அறிமுகமாகும் புதிய இசையமைப்பாளர்
தமிழ் சினிமாவில் புதிய இசையமைப்பாளராக வருண் முரளி அறிமுகமாகிறார்.
சென்னையின் மேடைகளிலும், வீதிகளிலும் தமது இசைத் திறமையை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்த இவர், சுருதிஹாசன் நடிப்பில் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் தடம் பதிக்கிறார்.
ஆர்யா நடிக்கும் ஹலோ காதல் படத்தின் மஜா மஜா பாடல்
ஆர்யா நடிக்கும் ஹலோ காதல் திரைப்படத்தின் துள்ளலான மஜா மஜா பாடல் வெளியாகியுள்ளது. நிகில் முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், வரும் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சிவராஜ்குமார் - அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடித்த பிக்காசோ
சிவராஜ்குமார் - அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடித்துள்ள பிக்காசோ திரைப்படத்தின் முதல் பாடலை நடிகர் சூரி வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலை இயக்குநரும், நடிகருமான அபிஷன் ஜீவிந்த் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் சினிமா செய்திகளுக்கு...