Lockdown movie 
சினிமா

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ’லாக்டவுன்’ திரையிடல்

இப்படத்திற்கு ரகுனந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளனர்.

Web Team

நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘லாக்டவுன்’ திரைப்படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. அறிமுக இயக்குநரான ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ள இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

கொரொனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள லாக்டவுன் திரைப்படம் டிசம்பர் 5-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு ரகுனந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளனர்.