manya 
சினிமா

சீரியல் நடிகை மான்யாவின் சீரியஸ் புகார், மேனேஜர் வேலையை காட்டினாரா?

படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக சொல்லி, நடிகர் தனுஷுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய நிர்பந்தம் - சீரியல் நடிகை மான்யா

Web Team

படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக சொல்லி, நடிகர் தனுஷுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய நிர்பந்தம் செய்ததாக சீரியல் நடிகை மான்யா ஆனந்த் பகிரங்கமாக குற்றம்சாட்டியது கோலிவுட்டில் புயலை கிளப்பியுள்ளது. தனுஷ் மீது ஏற்கனவே பல புகார்கள், சர்ச்சைகள் வரிசை கட்டி நிற்கும் நிலையில், சீரியல் நடிகையின் புகாரும் திடுக்கிட வைத்துள்ளது.
நடிகர் தனுஷை மையமாக வைத்து பரவும் கிசுகிசுவுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வரும் நிலையில், தற்போது சீரியல் நடிகையின் OPEN TALK பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வானத்தைப் போல, அன்னம், மருமகள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த நடிகை மான்யா ஆனந்த், யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், முன்னணி நடிகர்கள் புகைப்படங்களை காண்பித்து, அந்த நடிகர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என அட்வைஸ் சொன்னால் என்னவாக இருக்கும் என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, நடிகர் தனுஷ் புகைப்படம் வந்ததும் மேனேஜரை மாற்ற வேண்டும் என அதிரடியாக கூறிய மான்யா ஆனந்த், தனக்கு நிகழ்ந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
அதாவது, சில நாட்களுக்கு முன்பு நடிகர் தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் பேசுவதாக கூறி குறுஞ்செய்தி அனுப்பிய நபர், தனுஷுக்கு ஹீரோயினாக நடிக்க பட வாய்ப்பு இருப்பதாக கூறியதாகவும், பின்னர் கமிட்மெண்ட் என்ற பெயரில் தனுஷுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொன்னதாகவும் பகீர் கிளப்பினார்.
அட்ஜஸ்ட்மெண்ட் என சொன்னதும் மறுத்து விட்டதாக கூறிய மான்யா, அதற்கு பிறகும் கூட அந்த நபர் குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை செய்ததாக கூறியதோடு, நடிக்க வாய்ப்பு தருவதாக சொல்லி மூளைச்சலவை செய்ததாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதோடு, உண்மையிலேயே தன்னிடம் பேசியது தனுஷின் மேனேஜர் தானா? என்பது தெரியவில்லை என ''க்'' வைத்து பேசிய நடிகை மான்யா, ஆனால், தன்னை போல நிறைய பேருக்கு நடிகர் தனுஷின் பெயரை வைத்து அட்ஜஸ்ட்மெண்ட் அழைப்பு வந்திருக்கிறது என திகிலூட்டினார்.
கிசுகிசுப்புக்கு பெயர் போன நடிகராக கோலிவுட்டில் வலம் வருகிறார் நடிகர் தனுஷ். புதிதாக வந்த சில இளம் நடிகைகளுடன் தனுஷை சேர்த்து வைத்து தகவல்கள் பரவியதோடு, சில திருமணமான குடும்பத்திலும் தனுஷின் தலையீடு காரணமாக விவகாரத்து வரை சென்றதாக எல்லாம் கோலிவுட்டில் செய்திகள் ரெக்கை கட்டி பறந்தன.
ஆனால், தன்னை பற்றி பரவும் தகவல்களுக்கு இதுவரை நேரடியாக எந்த பதிலும் அளிக்காத தனுஷ், அவ்வப்போது ஆடியோ லாஞ்ச் மேடைகளில் மட்டும் தன்னை யாராலும் தொட முடியாது... யாராலும் சாய்க்க முடியாது என வசனம் பேசுவது மட்டுமே வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த வரிசையில் தனுஷின் பெயரை வைத்து தன்னை அட்ஜஸ்
ட்மெண்டுக்கு அழைத்ததாக சீரியல் நடிகை மான்யா கூறியிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் வெளியிட்ட அறிக்கையில், காஸ்டிங் கால் என்ற பெயரில் தனது பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபடுவதாக கூறியிருந்தார். ஆகையால், நடிகை மான்யாவும் அதே மாதிரியான மோசடி வலையில் சிக்கியிருக்க வாய்ப்பு என சொல்லப்படுகிறது.
தனுஷ் நடிப்பில் இன்னும் சில நாட்களில், தேரே இஷ்க் மெய்ன் திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஏற்கனவே படத்தின் இயக்குநர் ஆனந்த் எல்.ராயும், தனுஷும் இணைந்த ராஞ்சனா படம் ப்ளாக் பஸ்டர் ஆன நிலையில், இந்த கூட்டணி மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவும் சமயத்தில் தனுஷை சுற்றி சர்ச்சையும் எழ ஆரம்பித்திருக்கிறது.
நடிகை மான்யாவின் பேட்டி வேறு விதமான விமர்சனத்திற்கும் வழி வகுத்துள்ளது. சினிமாவில் நடிகர் தனுஷுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் தீவிர பனிப் போர் நிலவி வரும் நிலையில், மான்யாவின் பேட்டிக்கு பின்னணியிலும் சிவகார்த்திகேயன் தரப்பினர் தான் இருக்கக் கூடும் என தனுஷ் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
அதாவது, படத்தின் ரிலீஸை பாதிக்கும் நோக்கில் நிகழ்த்தப்படும் சதியா? என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
இதையும் பாருங்கள் -  தனுஷை குற்றம் சாட்டிய சீரியல் நடிகை - கார்த்திக்கை தாஜா செஞ்ச இயக்குநர் ஷங்கர் | CinemaNews