சிக்னல் அட் 11:30 
சினிமா

"சிக்னல் அட் 11:30" திரைப்படத்தின் 3-வது பாடல் வெளியாகி வரவேற்பு

D.இமான் இசையில் "போக போக போகாதே" பாடல்

Manigandan Raja

இயக்குநர் மலர்விழி நடேசன் எழுதி, இயக்கியுள்ள "சிக்னல் அட் 11:30" ((Signal At 11:30)) திரைப்படத்தின் 3-வது பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. மோகன்ராஜன் வரிகளில், "போக போக போகாதே" எனத் தொடங்கும் பாடலை இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்து பாடியுள்ளார்.

காதலர்களின் பிரிவுத் துயரை ஆழமாக பிரதிபலிக்கும் இந்த பாடலுக்கு நடன இயக்குநர் ஷெரிஃப் நடனம் அமைத்துள்ளார். சந்தோஷ் பிரதாப், பவ்யா திரிகா, பூஜிதா பொன்னாடா நடித்துள்ள இந்த படம் நாளை வெளியாகிறது.