7 
சினிமா

நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான சிக்கந்தர்.. ஏஆர்.முருகதாஸ் - சல்மான்கான் கூட்டணியில் வெளியான சிக்கந்தர்

ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான சிக்கந்தர் திரைப்படம் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியது.

Srini Vasan

ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான சிக்கந்தர் திரைப்படம் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியது.

சஜித் நதியத்வாலா தயாரிப்பில் கடந்த மார்ச் 30-ந்தேதி உலக அளவில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று 190 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது.

படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாதது படக்குழுவினருக்கு ஏமாற்றத்தை அளித்த நிலையில், படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி நள்ளிரவு முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் படம் வெளியானது.