கணக்கை தொடங்கிய Superstar 
சினிமா

இதுவரை வேட்டையன் Pre Booking வசூல்.. கோடிகளில் கணக்கை தொடங்கிய Superstar

TJ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் அக்டோபர் 10 - ம் தேதி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவர உள்ள படம் வேட்டையன். 'லைக்கா புரொடக்ஷன்' நிறுவனம் தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

Srini Vasan

ஜெய் பீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார். இப்படத்தில் பல ஆண்டுகள் கழித்து ரஜினியுடன் அமிதாப் பச்சன் நடித்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், சமீபத்தில் வேட்டையன் படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.மேலும், இப்படத்தில் பகத் பாசில், துஷாரா விஜயன், ராணா, ரித்திகா சிங், ரக்ஷன், அபிராமி என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தற்போது, வேட்டையன் படத்திற்கான ப்ரீ புக்கிங் வசூல் வெளிநாடுகளில் துவங்கிவிட்ட நிலையில், இதுவரை வெளிநாட்டில் மட்டும் வேட்டையன் படம் ரூ. 3 கோடி வசூல் செய்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.