"ஹேப்பி ராஜ்" திரைப்படம் :
நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஹேப்பி ராஜ் திரைப்படம் வரும் 27 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநரான மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷிற்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ கௌரிபிரியா நடித்துள்ளார்.
MYTHRI MOVIE MAKERS உடன் இணையும் PR :
"DUDE" திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, MYTHRI MOVIE MAKERS தயாரிப்பு நிறுவனம், மீண்டும் பிரதீப் ரங்கநாதனை வைத்து திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. "DUDE" திரைப்படத்திற்கு பிரதீப் ரங்கநாதன் 13 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாக கூறப்படும் நிலையில், புதிய திரைப்படத்திற்கு 50 கோடி ரூபாய் வரை சம்பள தர நிறுவனம் தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது.
வரலட்சுமி சரத்குமார் இயக்கிய படப்பெயர் ’சரஸ்வதி’ :
வரலட்சுமி சரத்குமார் இயக்கிய புதிய படத்திற்கு ’சரஸ்வதி’ என பெயரிடப்பட்ட நிலையில் அது கடவுளின் பெயர் என தணிக்கை வாரியம் சொல்ல, படத்தின் பெயரை `எஸ் சரஸ்வதி' என பெயர் மாற்றி படக்குழு சான்றிதழ் பெற்றுள்ளது. வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ப்ரியாமணி, கிஷோர், ராவ் ரமேஷ், ராதிகா, நாசர் எனப் பலரும் நடித்துள்ளனர்.
வாடிவாசல் திரைப்படத்தை தொடர விரும்பும் வெற்றிமாறன் :
வாடிவாசல் திரைப்படம் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்படுள்ள நிலையில், சூர்யாவிடம் இயக்குநர் வெற்றி மாறன் 130 நாட்கள் கால்சீட் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாதத்திற்கு 10 நாட்கள் கால்சீட் தர தயார் என்றாலும் ஒரு சில காட்சி அமைப்புகளை மாற்றி அமைக்க சூர்யா தரப்பு எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.