யானைமரம் 
சினிமா

20 சர்வதேச விருதுகளை வென்ற "யானைமரம்" திரைப்படம்

பழங்குடி மக்களின் கிராமத்தை பின்னணியாக கொண்ட படம் இயக்குநர் ராமையா ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான படம்

Manigandan Raja

"யானைமரம்" திரைப்படம் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, இதுவரை இப்படம் 20 விருதுகளை பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

யானைமரம்

இயக்குநர் ராமையா ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், அபினேஷ், ஜோதி கண்ணன், செம்புலி ஜெகன், ஜெயிலர் சீனு, ராணி, மஞ்சு, லீலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தை பின்னணியாகக் கொண்டு இந்த படத்தின் கதை உருவாகியுள்ளது.