சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘மை லார்ட்’ திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் ராஜுமுருகன் இயக்கி வரும் இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சர் நடித்துள்ளார். இன்று வெளியாகும் ‘எச காத்தா’ பாடலை சின்மயி, சத்யபிரகாஷ் இணைந்து பாடியுள்ளனர்