Mamooty 
சினிமா

முகமது குட்டி என்ற பெயர் மம்மூட்டி என மறுவியதற்கு காரணம்

கேரளாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், மம்மூட்டி தனது கல்லூரி நாட்களை நினைவு கூர்ந்தார்.

Web Team

முகமது குட்டி என்ற தனது பெயர் மம்மூட்டி என மறுவியதற்கு பின்னால் உள்ள சுவாரஸ்யமான கதையை நடிகர் மம்மூட்டி பகிர்ந்துள்ளார். கேரளாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், மம்மூட்டி தனது கல்லூரி நாட்களை நினைவு கூர்ந்தார். அப்போது, நண்பர்களில் ஒருவரான சசிதரன், ஐடி கார்டில் 'முகமது குட்டி' என்ற தனது பெயரை 'மம்மூட்டி' என்று தவறாகப் படித்ததாகக் கூறினார். பின்னர் அந்த பெயரே தனக்குப் பொருத்தமாகிவிட்டது என்று மம்மூட்டி தெரிவித்தார்.