விமர்சனங்கள் எழுந்த நிலையில் தம்பி ராமையா விளக்கம் :
TN2026 என்ற திரைப்படம் விஜயை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாக அவரது ரசிகர்கள் கொந்தளித்த நிலையில், கதையை எழுதிய நடிகர் தம்பி ராமையா இது விளக்கம் அளித்துள்ளார். தேர்தலை பின்னணியாக கொண்டு அரசியல் நகைச்சுவை படமாக உருவாகியுள்ள ‘TN 2026 திரைப்படத்தின் டீசர் வெளியானது.
இந்நிலையில் தவெக தலைவர் விஜயை குறிவைத்து படம் விமர்சிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனிடையே இது குறித்து பேசிய தம்பி ராமையா நடிகர் விஜயை குறி வைத்து இந்த படம் எடுக்கபடவில்லை என்று அவரது ரசிகர்களை படம் காயபடுத்தாது என்று கூறியுள்ளார்.
'மிஸ்டர் எக்ஸ்' திரைப்படம் இந்த மாதம் வெளியாகும் :
ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'மிஸ்டர் எக்ஸ்' திரைப்படம் இந்த மாதத்தில் ரிலீஸாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மனு ஆனந்த் இயக்கிய இந்த படத்தில் சரத்குமார், மஞ்சு வாரியர், அனேகா உள்ளிட்டோர் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடித்துள்ளார்.
ஸ்பை திரில்லர் கதை களத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
'கான்சிட்டி' திரைப்படம் நடிகர்களின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்:
அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'கான்சிட்டி' திரைப்படத்தில் நடித்துள்ள பிரபல நடிகர்கள் ராதாரவி, ஷாஜி சென், தீபா ராமானுஜம் ஆகியோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில், ராதாரவி "அப்துல் ரசாக்" எனும் கதாபாத்திரத்திலும், நடிகர் ஷாஜி சென் "எம்.எல்.ஏ. செந்தில்" எனும் கதாபாத்திரத்திலும் தீபா ராமானுஜம் "சுதா" எனும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
சூரியா நடிப்பில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படம் :
சூரியா நடிப்பில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படத்திற்கு தெலுங்கில் 'வீரபத்ருடு' என்று பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தில் திரிஷா, நட்டி, இந்திரன்ஸ், சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ள இந்த படத்தின் ரிலீஸ் பல நாட்களாக தள்ளிப்போன நிலையில், வருகிற மே மாதம் 14-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.