கோலிவுட் செய்திகள் 
சினிமா

இன்றைய திரைப்பட செய்திகள்

‘மீசைய முறுக்கு-2’ திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் வரும் 8-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Manigandan Raja

மீசையை முறுக்கு-2 திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள்  : 

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு-2’ திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் வரும் 8-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இத்திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஆரா 10/10’ ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று, யூடியூப் வலைதளத்தில் 2 கோடி பார்வைகள் வரை பெற்று அசத்தியுள்ளது.

பேட்ரியாட் திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு : 

மம்முட்டி, மோகன்லால் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள ‘பேட்ரியாட்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள ஆக்சன் திரில்லர் கலந்த இத்திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன.

மம்முட்டி மற்றும் மோகன்லாலின் சண்டைக் காட்சிகள் நேர்த்தியாக எடிட் செய்யப்பட்டுள்ளதால் பேட்ரியாட் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கச் செய்துள்ளது. மே 1-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அல்லு அர்ஜூன்-அட்லி கூட்டணியில் புதிய திரைப்படம் : 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜூன்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படத்தின் 1.33 நிமிட Motion glimpse வீடியோ வரும் 7ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் இசையில் உருவாகும் இத்திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது.

‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் :

நடிகர்கள் ஆர்யா, கவுதம் ராம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படத்திற்கு, தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. மனு ஆனந்த் இயக்கத்தில் ஆக்சன் திரில்லர் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்தப்படம் வரும் ஏப்ரல் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.