படம் டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு
- விஜய் சேதுபதி நடித்துள்ள "டிரெயின்" திரைப்படம் டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
- கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில், நாசர், ஷ்ருதி ஹாசன், யூகி சேது, நரேன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தனது முன்னாள் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த நடிகர்
- ஸ்பைடர்மேன் நடிகர் டோபி மாகுவேர் ((Tobey Maguire)) , தனது முன்னாள் மனைவி ஜெனிஃபர் மேயருக்கும் கோடீஸ்வரர் ஜெஃப்ரிக்கும் திருமணம் நடத்தி வைத்துள்ளார். டோபியும், ஜெனிஃபர் மேயரும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்தனர்.
- சமீபத்தில்தான் இருவரும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றதாகக் கூறப்படுகிறது.