35 
மாவட்ட செய்திகள்

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தியதாக 10 பேர் கைது... ரூ.35 லட்சம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Srini Vasan

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக 10 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 7 செல்போன்களை கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொலை மற்றும் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.