9 
மாவட்ட செய்திகள்

வங்கி வாயிலில் வாடிக்கையாளர் தவறவிட்ட 10 சவரன் நகை.. உரியவரிடம் ஒப்படைத்த தொழிலாளிக்கு குவியும் பாராட்டு

திருப்பத்தூர் கனரா வங்கி வாயிலில் வாடிக்கையாளர் தவற விட்ட 10 சவரன் நகை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சி மோட்டூர் கிராமத்தை சேர்ந்த பெருமாள், கனரா வங்கியில் நகையை அடகு வைக்க வந்தபோது தவறவிட்டார்.

Web Team

திருப்பத்தூர் கனரா வங்கி வாயிலில் வாடிக்கையாளர் தவற விட்ட 10 சவரன் நகை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சி மோட்டூர் கிராமத்தை சேர்ந்த பெருமாள், கனரா வங்கியில் நகையை அடகு வைக்க வந்தபோது தவறவிட்டார்.

அதை எடுத்து வங்கி மேலாளரிடம் ஒப்படைத்த அனேரி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி நந்தகுமாருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.