புளியங்குடி, தென்காசி 
மாவட்ட செய்திகள்

2 மனைவிகள், மாமியாருடன் சேர்ந்து நகை பறிப்பு.. வயதானவர்களை குறிவைத்து பேருந்தில் நகை பறிப்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே நபர் தனது 2 மனைவிகள் மற்றும் மாமியாருடன் நகை பறிப்பில் ஈடுபட்ட நாகப்பன் என்பவரை போலீசார் கும்பலாக கைது செய்தனர்.

Srini Vasan

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே நபர் தனது 2 மனைவிகள் மற்றும் மாமியாருடன் நகை பறிப்பில் ஈடுபட்ட நாகப்பன் என்பவரை போலீசார் கும்பலாக கைது செய்தனர்.

புளியங்குடியில் பேருந்தில் பயணித்த மாரியம்மாள் என்பவரின் 5 பவுன் நகையும், சாய்ராபீவி என்பவரின் 4.5 பவுன் நகையையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பேருந்தின் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்ததில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி இவர்களை நகைகளை திருடியது அம்பலமானது.