சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆணையாளர் உத்தரவின் பேரில் ரேஷன் அரிசி கடத்துவது தொடர்பாக சிறப்பு கண்காணிப்பில் ஈடுபட்ட அதிகாரிகள் எழும்பூர் ரயில் நிலைய மேடையில் இருந்த 40 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நடைமேடையில் அரிசியை வைத்துச் சென்றவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.