TPT Drug 
மாவட்ட செய்திகள்

பெங்களூரு சென்ற ஹவுரா ரயிலில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயில் பெட்டியில் பயணிகளின் இருக்கைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொட்டலங்களை போலீசார் கண்டுபிடித்தனர்.

Manigandan Raja

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே, ரயிலில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை வழியாக செல்லும் ஹவுரா- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில், ஆம்பூர் அருகே வந்து கொண்டிருந்தபோது, ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ரயில் பெட்டியில் பயணிகளின் இருக்கைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொட்டலங்களை போலீசார் கண்டுபிடித்தனர்.