TNL POLICE REWARD 
மாவட்ட செய்திகள்

அரிசி வியாபாரி தவறவிட்ட ரூ.2.50 லட்சம் ரூபாய்

கவனக்குறைவாக தவறவிட்டு பணத்தை, கடை உரிமையாளர் கிருஷ்ணன் எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

Web Team

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் அரிசி வியாபாரி தவறவிட்ட இரண்டரை லட்சம் ரூபாயை நேர்மையுடன் ஒப்படைத்த டீ கடை உரிமையாளருக்கு போலீஸார் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். பேருந்து நிலையத்தில் உள்ள கடையில் டீ குடிக்க சென்ற அரிசி வியாபாரி மாரியப்பன், கவனக்குறைவாக தவறவிட்டு பணத்தை, கடை உரிமையாளர் கிருஷ்ணன் எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.