கோவை அரசு மருத்துவமனையில் அனைவரும் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 700 ஐ தாண்டிய நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரக்கூடிய அனைவரும் மாஸ்க் அணிந்து வர மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.