govt 
மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனையில் ஒரே படுக்கையில் 3 பேருக்கு சிகிச்சை.. போதிய படுக்கை வசதி இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் ஒரே படுக்கையில் 3 பேர் சிகிச்சை பெறும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

Srini Vasan

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் ஒரே படுக்கையில் 3 பேர் சிகிச்சை பெறும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

புதுச்சேரி பகுதிகளில் டெங்கு, டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சலால் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

ஆனால், அவசர சிகிச்சை பிரிவில் போதிய படுக்கை வசதி இல்லாததால், ஒரே படுக்கையில் 3 பேரும், தரையில் அமர்ந்தும், வராண்டாவில் அமர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து முதலமைச்சர் ரங்கசாமியிடம் கேட்டபோது, டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாகவும், போதிய மருந்துகள் இருப்பில் உள்ளதாகவும் கூறினார்.