32 
மாவட்ட செய்திகள்

புறவழிச்சாலை பகுதியில் ஒரே இடத்தில் இருந்த 3 டாஸ்மாக் கடை..

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் ஒரே இடத்தில் செயல்பட்டு வந்த 3 அரசு மதுபான கடைகள் மூடப்பட்ட நிலையில், விசிக மற்றும் பாஜகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Web Team

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் ஒரே இடத்தில் செயல்பட்டு வந்த 3 அரசு மதுபான கடைகள் மூடப்பட்ட நிலையில், விசிக மற்றும் பாஜகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

பெண்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக அரசு மதுபான கடை செயல்பட்டு வருவதாகவும் அவற்றை மூடக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆம்பூரை சேர்ந்த ராம சீனிவாசன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் 3 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.