நீதிமன்றத்தின் உத்தரவின்படி, சிவகங்கை மருத்துவக்கல்லூரிக்கு பின்புறத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில், மூன்றாயிரம் லிட்டர் எரிசாராயத்தை ஊற்றி போலீஸார் தீயிட்டு அழித்தனர்.
சிங்கம்புணரியில் கடந்த 2024 ஆம் ஆண்டு குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்றாயிரம் லிட்டர் எரிசாராயத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கு சிவகங்கை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், எரிசாராயத்தை அழிப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.