விருதுநகர் மாவட்டம் வீரசோழன் பத்திரப்பதிவு அலுவலகத்தின் பொறுப்பு சார் பதிவாளரிடம் கணக்கில் வராத 3 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அருப்புக்கோட்டையை சேர்ந்த அசோக்குமார் பொறுப்பு சார் பதிவாளராக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வரும் நிலையில், பத்திரபதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கி வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அவரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்த நிலையில், காரில் லஞ்ச பணத்தை எடுத்துக்கொண்டு சென்றபோது பிடித்தனர்.