CDL thenpannai 
மாவட்ட செய்திகள்

சாத்தனூர் அணையில் இருந்து 6,200 கன அடி நீர் திறப்பு

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

Web Team

கடலூர் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, செல்ஃபி எடுக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சாத்தனூர் அணையில் நீர்வரத்து அதிகரித்ததால், விநாடிக்கு 6ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றுக்கு திறந்து விடப்பட்டது.

இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.