நாகை அருகே வடக்குப் பொய்கைநல்லூரில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில், அம்மன் கழுத்தில் இருந்த 8 கிராம் திருமாங்கல்யத்தை மர்மநபர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியானது. வழக்கம்போல், பூஜை செய்வதற்காக சென்ற அர்ச்சகர், அம்மன் கழுத்தில் இருந்த திருமாங்கல்யம் காணாமல் போனதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீஸாரிடம் புகார் அளித்தார்.