Ambur 
மாவட்ட செய்திகள்

3 மாத பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து இறப்பு

குழந்தையை பராமரிக்க முடியாமல் ஏற்பட்ட வெறுப்பில், தண்ணீர் தொட்டியில் குழந்தையை தூக்கி கொலை

Web Team

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 3 மாத பெண் குழந்தையை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் தூக்கி வீசி கொடூரமாக கொலை செய்த குழந்தையின் தாயை போலீஸார் கைது செய்தனர். பெத்தலேகம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த அக்பர் பாஷா-அர்ஷியா தம்பதிக்கு ஏற்கனவே ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளநிலையில், மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில்,வீட்டிற்கு அருகில் தரைதளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் 3 மாத பெண் குழந்தை இறந்து கிடந்ததை அறிந்து அங்கு சென்ற போலீஸார், சடலத்தை மீட்டு விசாரணை கொண்டனர். விசாரணையில், குழந்தையை பராமரிக்க முடியாமல் ஏற்பட்ட வெறுப்பில், தண்ணீர் தொட்டியில் குழந்தையை தூக்கி கொலை செய்ததாக தாயார் அர்ஷியா போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.