15 
மாவட்ட செய்திகள்

கோல்போஸ்ட் தலையில் விழுந்து 7 வயது சிறுவன் பலி.. விமானப்படை ஊழியர்கள் குடியிருப்பில் நிகழ்ந்த சோகம்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி விமானப்படை ஊழியர்கள் குடியிருப்பில் உள்ள மைதானத்தில் கால்பந்து கோல்போஸ்ட் தலையில் விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Srini Vasan

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி விமானப்படை ஊழியர்கள் குடியிருப்பில் உள்ள மைதானத்தில் கால்பந்து கோல்போஸ்ட் தலையில் விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமானப்படையில் மல்டி டாஸ்க் பணியாளராக உள்ள ராஜேஷ் என்பவரது மகன் ஆத்ரிக், விளையாடிக்கொண்டிருந்த போது அவர் மீது இரும்பிலான கோல் போஸ்ட் விழுந்ததில் படுகாயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழ்ந்தார்.