திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வத்தலகுண்டு பிரதான சாலையில் நிலைதடுமாறிய இருசக்கர வாகனம், தனியார் பேருந்தில் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கடந்த 25ஆம் தேதி ராஜபாளையத்தை சேர்ந்த இளைஞர்கள் இரண்டு பேர் வந்த இருசக்கர வாகனம் வாழைகிரி என்ற இடத்தில் குறுகலான சாலை வளைவில் நிலைதடுமாறி விழுந்தது எதிரே வந்த தனியார் பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.