ராமேஸ்வரத்தில், சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது, இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தங்கச்சிமடம் பகுதியில் மெழுக்கி என்பவர் கடைக்கு சென்று, பின் சாலையை கடந்த போது இந்த விபத்தில் சிக்கினார். 3 பேர் சென்ற பைக் அவர் மீது மோதி விட்டு சென்ற நிலையில், இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.