கும்பகோணத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நிகழ்ச்சியில் பெண் ஒருவர் கேள்வி எழுப்பியதால், அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நலத்திட்ட உதவிகளை கூட வழங்காமல் பாதியிலேயே வெளியேறினார்.
பாலக்கரையை சேர்ந்த புஷ்பா என்பவர், தனது சகோதரர் தங்கதுரைக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என புஸ்ஸி ஆனந்திடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.