ERD Crocodile 
மாவட்ட செய்திகள்

பவானிசாகர் அணையின் மேல்பகுதி சாலையில் உலாவும் முதலை

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள முதலைகள் அணைக்கு அடித்து வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Manigandan Raja

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து வெளியேறிய முதலை ஒன்று, சாலையில் சுற்றித்திரிந்ததால், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அச்சம் அடைந்தனர்.
பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதியான தெங்குமரஹாடா வனப்பகுதியில் உள்ள மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள முதலைகள் அணைக்கு அடித்து வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.