TPT Dog byte 
மாவட்ட செய்திகள்

நாட்றம்பள்ளி அருகே சாலையில் நடந்து சென்றவரை கடித்த நாய்

சந்தோஷ்குமார் என்பவர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவரது காலில் கடித்து விட்டு ஓடியது

Web Team

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே சாலையில் நடந்து சென்றவரை தெரு நாய் திடீரென கடித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மேல்பச்சூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவரது காலில் கடித்து விட்டு ஓடியது. காயமடைந்த சந்தோஷ்குமார் சிகிச்சை பெற்ற நிலையில் அவரை கடித்த நாய், ((எனக்கு எதுவும் தெரியாது என்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு )) சாலையோரம் படுத்திருந்த வீடியோவும் வெளியாகியுள்ளது.